Wednesday, 7 January 2009

கடவுள் பூமிக்கு

................................................................................
மனச்சாhட்சியில்
கடவுள் பூமிக்கு - வருவதில்லை
மனித உருவில் மனிதனையே
காண்பது அரிது
மனித உருவில் கடவுள்
என்றால் அதிலும் அரிது
எனினும் மனச்சாட்சி
உன்னிடம் இருப்பின்
தோற்றுப் போயினும்
துவண்டு போகாதே
மனச்சாட்சியில் தோற்றுப்போகமாட்டாய்
மனச்சாட்சி மனிதனில்
உள்ள தெய்வத் தன்மை அது
இருப்பின் அதுதான் கடவுள்.
………மகிழ்.
.....................................................................................................................................................

புத்தகங்களின் துணையுடன்

................................................................................................................................................................................................
புத்தகங்களின் துணையுடன்
புத்தகங்களின் துணையில்
புத்துயிர் பெறு தென்படை
புதியதோர் தெளிவைப் பெறு
பெரியதோர் மனிதனோட
பேச சந்தர்ப்பம்
கிடைத்ததாக எண்ணி
மனம் மகிழ்.
............................................................................................................................................................................

இலட்சியம் எட்டுவதில்

........................................................................................................................................................................................
இலட்சியம் எட்டுவதில்
மகிழ்ச்சி கொள்
இறுதி வரை
போராடுவதில் மகிழ்ச்சி கொள்
இயன்ற வரை
மனிதராய் வாழ்வதில்
மகிழ்ச்சி கொள்
இன்னா செய்தார்
கண் காண நீ முன்னேறு
இலட்சியத்தை எட்டு..
இமயம் வரை
மகிழ்.
...................................................................................................................................................

ஒரு முயற்சியில் நீ

.............................................................................................................................................


ஒரு முயற்சியில் நீ
நூறு தடவைகள் கூட
தோற்றுப் போகலாம்.
மகிழ்ச்சி கொள்
அம் முயற்சியில்
நூறு தவறான வழிகள்
இருப்பதை அறிந்ததற்கு.
................................................................................................................................................................................

உன்னை நம்பும்

...............................................................................................................................................
உன்னை நம்பும்
பூமியை எண்ணி
மகிழ்ச்சி கொள்
உன்னை உயிரூட்டும்
நட்பை எண்ணி
மகிழ்ச்சி கொள்
உனக்கு வேராகி
நீரூட்டும்
விசுவாசியை எண்ணி
மகிழ்ச்சி கொள்.......................
....................................................................................................................................................

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்